2020ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இதன் பலனாக ஐந்தாவது முறையாக ஆஸ்திரேலிய அணி டி20 உலகக்கோப்பைத் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
கிட்டத்தட்ட 87 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலே ஆட்டநாயகியாகவும், இந்த உலகக்கோப்பைத் தொடரின் நாயகியாக 259 ரன்கள் குவித்த பெத் மூனியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியுள்ளதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஆடவர் அணியிடம் கங்குலி தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்ததை நினைவுப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2003 உலகக்கோப்பையை மீண்டும் கண்முன் நிறுத்திய ஆஸி. மகளிர் அணி!