இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான், டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன், 600-க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய சுழற்பந்து வீச்சாளார், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட சிறந்த வீரரான அனில் கும்ப்ளே இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
"தேவைப்படும் போது எல்லாம் என்னை அதிகம் ஊக்கப்படுத்திய ஒருவருக்கு - பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜம்போ @ anilkumble1074, இந்திய கிரிக்கெட்டிலும், இளைஞர்களை வழிநடத்துவதிலும் உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது. உங்களுக்கு எனது அன்பும், வாழ்த்துகளும்”என்று யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார்.
-
Many more happy returns of the day to a man who taught us to never give up no matter what. Wish you a wonderful birthday and a glorious year ahead @anilkumble1074 . pic.twitter.com/b3x4urFCgD
— VVS Laxman (@VVSLaxman281) October 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Many more happy returns of the day to a man who taught us to never give up no matter what. Wish you a wonderful birthday and a glorious year ahead @anilkumble1074 . pic.twitter.com/b3x4urFCgD
— VVS Laxman (@VVSLaxman281) October 17, 2020Many more happy returns of the day to a man who taught us to never give up no matter what. Wish you a wonderful birthday and a glorious year ahead @anilkumble1074 . pic.twitter.com/b3x4urFCgD
— VVS Laxman (@VVSLaxman281) October 17, 2020
ஒருபோதும் முயற்சியை கைவிடக் கூடாது என்பதை தனக்கு கும்ப்ளே கற்றுக் கொடுத்தார் என்று இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார்
கும்ப்ளேவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ள அவர், "எந்தச் சூழலிலும் ஒருபோதும் முயற்சியை கைவிட வேண்டாம் என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரு மனிதருக்கு இன்று பிறந்தநாள். உங்களுக்கு ஒரு அற்புதமான வருடம் அமைய வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Many many happy returns of the day 🎂🎂🎂 @anilkumble1074 pic.twitter.com/ID0ZrG6FQc
— Mohammad Shami (@MdShami11) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Many many happy returns of the day 🎂🎂🎂 @anilkumble1074 pic.twitter.com/ID0ZrG6FQc
— Mohammad Shami (@MdShami11) October 16, 2020Many many happy returns of the day 🎂🎂🎂 @anilkumble1074 pic.twitter.com/ID0ZrG6FQc
— Mohammad Shami (@MdShami11) October 16, 2020
1999 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஜிம் லேக்கருக்குப் பிறகு வரலாற்றில் இடம் பிடித்த இரண்டாவது கிரிக்கெட் வீரர், ஒரே இந்தியர் என்ற பெருமையையும், சாதனையையும் கும்ப்ளே தன்வசம் வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டில், அவர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். தற்போது, கும்ப்ளே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.