ETV Bharat / sports

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலியின் இடத்தை பிடித்த வில்லியம்சன்!

author img

By

Published : Dec 7, 2020, 7:05 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.

Williamson rises to joint 2nd with Kohli in ICC Test rankings for batsmen

அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் ஐசிசி இன்று (டிச.07) வெளியிட்ட சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 886 புள்ளிகளுடன், இந்திய கேப்டன் விராட் கோலியுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மார்னஸ் லபுசானே 827 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர் சட்டேஸ்வர் புஜாரா 766 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் நீடிக்கிறார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் நியூசிலாந்தின் நெய்ல் வாக்னர் 849 புள்ளிகளை எடுத்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 779 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 446 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இப்பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 397 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்திலும், ரவிச்சந்திர அஸ்வின் 281 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.

இதையும் படிங்க:ஐஎஸ்எல்: ஏடிகேவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா ஜாம்ஷெட்பூர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.