ETV Bharat / sports

'இளைஞர்களுக்கான உத்வேகம் வில்லியம்சன்' - விவிஎஸ் லக்ஷ்மண்!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை, இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் பாராட்டியுள்ளார்.

author img

By

Published : Jan 4, 2021, 6:49 PM IST

Williamson a true model for any youngster to emulate: Laxman

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் இரண்டாம் நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் நியூசிலாந்து அணியில், கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான விவிஎஸ் லக்ஷ்மண் தனது ட்விட்டர் பக்கத்தில், வில்லியம்சனைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவர் தனது ட்வீட்டில், "கேன் வில்லியம்சனின் திறனைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. எந்தவொரு போட்டிக்கும் முழு கவனத்துடன் செயல்படுவது, அவரது வெற்றிக்கு காரணமாகும். அவர் இளைஞர்களுக்கான ஒரு உண்மையான உதாரணம்" என்று பதிவிட்டுள்ளார்.

  • Not at all surprised to see the consistency of Kane Williamson. Unbelievable work ethics and attention to detail while preparing for any match are the reasons behind his success. A true role model for any youngster to emulate. #NZvPAK pic.twitter.com/TCoF3bAcyk

    — VVS Laxman (@VVSLaxman281) January 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இன்று நிறைவடைந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் 112 ரன்களுடனும், ஹென்றி நிக்கோல்ஸ் 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இதன்மூலம் 11 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ரோஹித்தை வீழ்த்த திட்டம்' - நாதன் லயன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.