பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற ஜனவரி 16ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு வங்கதேச கிரிக்கெட் வாரியம், நாங்கள் பாகிஸ்தான் சென்று விளையாடுவது இயலாத காரியம் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது.
இதனிடையே நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைவர் ஷ்சன் மணி, ஜனவரி 18 முதல் பாகிஸ்தானில் நடைபெறும் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு வங்கதே அணியை அனுப்ப மறுத்ததற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை வழங்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தையும் கேட்டுள்ளார்.
இதற்கு, வங்கதேச கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பானது அல்ல என்ற காரணம் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என பதிலளித்தது. மேலும் பாகிஸ்தானின் பாதுகாப்பு காரணங்கள் இன்னும் முழுமையடையாமல் உள்ளதால் தற்போது வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை என கூறியுள்ளது.
இதானால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்களுக்கு பாதுகாப்பு குறித்த கவலையிருப்பின், போட்டிகளை பொதுவான இடங்களில் வைத்துகொள்ளலாம் என பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க:சதங்களால் கிடைத்த பாகிஸ்தானின் வரலாற்று வெற்றி!