ETV Bharat / sports

’எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேனு சொல்லு’ - சீன் அப்போட்!

ஆஸ்திரேலிய அணியின் சர்ச்சைக்குரிய பந்துவீச்சாளரான சீன் அப்போட் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் நேற்று களமிறங்கினார்.

author img

By

Published : Nov 9, 2019, 3:16 PM IST

Sean abbott comeback

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் டி20 போட்டி மழையினால் முடிவு இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டியானது நேற்று பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஆஸ்திரேலியா அணிக்காக ஐந்தாண்டு கழித்து வேகப்பந்துவீச்சாளரான சீன் அப்போட் களமிறக்கப்பட்டார். இவர் இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடியிருந்தார்.

  • Sean Abbott's last two T20I appearances:

    👉 0/14 v South Africa ➢ November 9, 2014
    👉 2/14 v Pakistan ➢ November 8, 2019

    What a comeback after five years 👏#AUSvPAKhttps://t.co/Ta8jAjnZgB

    — ICC (@ICC) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில்தான் தனது மூன்றாவது சர்வதேச டி20 விளையாடினார். மேலும் இதில் ஆச்சரியப்படும்படி இவர் 2014ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 14 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எடுக்காமல் இருந்தார்.

ஆனால் நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய அப்போட் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தானையும் பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Intro:Body:

Sean Abbott's last two T20I appearances:

0/14 v South Africa ➢ November 9, 2014

2/14 v Pakistan ➢ November 8, 2019 What a comeback after five year

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.