இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடிவருகின்றது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியின்போது ஆட்ட நடுவரான ஜவஹல் ஸ்ரீநாத், வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு குறித்து ஐசிசியிடம் முறையிட்டார். அதில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரன் பொல்லார்ட் வேண்டுமென்றே ஆட்டத்தை காலதாமதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் ஆட்டம் இரண்டு ஓவர்கள் வரை அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது என முறையிட்டார்.
-
West Indies have been penalised for maintaining a slow over-rate during the first #SLvWI ODI.
— ICC (@ICC) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details ⬇️https://t.co/A3I6gbqDMh
">West Indies have been penalised for maintaining a slow over-rate during the first #SLvWI ODI.
— ICC (@ICC) February 23, 2020
Details ⬇️https://t.co/A3I6gbqDMhWest Indies have been penalised for maintaining a slow over-rate during the first #SLvWI ODI.
— ICC (@ICC) February 23, 2020
Details ⬇️https://t.co/A3I6gbqDMh
இதனையடுத்து இந்த விவகாரத்தை கையிலெடுத்து ஐசிசி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டத்தொகையிலிருந்து 40 விழுக்காடு அபராதமாகக் கட்டவேண்டுமென்று உத்தரவிட்டது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடந்தாண்டு இந்திய அனியுடனான தொடரின்போது போட்டிக் கட்டணத்திலிருந்து 80 விழுக்காடு கட்டணத்தை அபராதமாக ஐசிசி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலாவது ஒருநாள்: இறுதி ஓவரில் திரில் வெற்றிபெற்ற இலங்கை!