ETV Bharat / sports

#INDvWI: 117 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீசை சுருட்டிய இந்தியா!

author img

By

Published : Sep 1, 2019, 10:20 PM IST

ஜமைக்கா: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

INDvWI

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றுவருகிறது.

இதில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, அனுமா விஹாரி 111 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 87 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

INDvWI
விக்கெட் எடுத்த மிகழ்ச்சியில் ஷமி

இந்நிலையில், மூன்றாம் ஆட்ட நாள் இன்று தொடங்கியது. அப்போது, களமிறங்கிய ரஹீம் கார்ன்வால் 14 ரன்களுடன் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜமார் ஹமில்டன் ஐந்து ரன்களிலும், கெமார் ரோச் 17 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு சுருண்டது. இதனால், இந்திய அணி 299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிவருகிறது. இந்திய அணி தரப்பில் பும்ரா ஆறு விக்கெட்டுகளையும், முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.