ETV Bharat / sports

சிட்னி இனவெறிக்கு எதிராக விராட் கோலி காட்டம்! - சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டின் போது இந்திய அணி வீரர்களை இனரீதியாக விமர்சித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

We unreservedly apologise to Team India: CA post SCG crowd racial abuse

author img

By

Published : Jan 10, 2021, 4:44 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வேகப்பந்துவீச்சளர் முகமது சிராஜை, சிட்னி மைதானத்திலிருந்த ரசிகர்கள் இனரீதியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

இச்சம்பவத்திற்கு இந்தியாவிடம் மன்னிப்புக் கோருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது. மேலும், இதுகுறித்து நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டு, அவர்களை நியூ சௌத் வேல்ஸின் எந்த கிரிக்கெட் மைதானத்திற்கு செல்ல முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • We have launched an investigation in parallel with NSW Police following a crowd incident at the SCG today. Full statement 👇 pic.twitter.com/D7Qu3SenHo

    — Cricket Australia (@CricketAus) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், சிட்னி இனவெறி சர்ச்சையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டுமென இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில், இனரீதியான விமர்சனங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மைதானத்தின் பவுண்டரி எல்லைகளில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் களத்தில் இதுபோன்று நடப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

  • The incident needs to be looked at with absolute urgency and seriousness and strict action against the offenders should set things straight for once.

    — Virat Kohli (@imVkohli) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் நடவடிக்கையை பார்த்து, இனி யாரும் இவ்வாறு செய்வதற்கு யோசிக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘ஆக்ரோஷமாக விளையாடுவதற்கு புஜாரா அச்சமடைகிறார்’ - ஆலன் பார்டர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.