இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற இவர், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா, ஜம்மு காஷ்மீரிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர தனக்கு அனுமதியளிக்கும்படி அம்மாநில காவல் துறை உயர் அலுவலர்களுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினரும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக காஷ்மீர் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தூரு அண்டர் -19 தொடரின் இறுதிப் போட்டியைக் காண சுரேஷ் ரெய்னா, தூரு கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று நேரில் சென்று போட்டியைப் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினர். பிறகு அங்கிருந்த மாணவர்களுடன் சேர்ந்து விளையாடியும் மகிழ்ந்தார்.
இதையும் படிங்க:கத்தார் உலகக்கோப்பை ஏற்பாட்டுக்கு ஃபிஃபா தலைவர் பாராட்டு!