இந்தியாவில் நடத்தபடும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் வாஷிம் ஜாஃபர். இவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்களை அடித்து, இத்தொடரில் அதிகபட்ச ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தவர்.
மேலும் ரஞ்சி கோப்பை கிரிக்கெத் தொடரில் 150 போட்டிகளில் விளையாடி, இத்தொடரின் அதிக போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனையையும் தன்வசபடுத்தியுள்ளார். இதன் காரணமாக இவர் வங்கதேச அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார்.
தற்போது ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ளேவின் வற்புறுத்தலின் பேரிலே இந்த பதவியை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:சேவாக் - கங்குலியின் சாதனையை முறியடித்த ஹிட்மேன் ஜோடி!