துபாய்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான பிறகு, பதற்றம் ஏற்பட்டதை விட மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், அணிக்காக சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ரவி பிஷ்னோய். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று(செப்.20) நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானார்.
அந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசிய பிஷ்னோய், 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான ரிஷப் பந்தின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ரவி பிஷ்னோய் பற்றி சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று அறிமுகம் கண்டது பற்றி ரவி பிஷ்னோய் கூறுகையில், '' கிங்ஸ் லெவன் அணிக்காக அறிமுகமான பிறகு, பதற்றம் ஏற்பட்டதை விடவும் உற்சாகமாகவும் அணிக்காக சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்தினேன்.
என்னுடையே அடிப்படைகளை நேற்று சரியாக செய்தேன் என நினைக்கிறேன். எந்த வீரருக்கு எதிராகவும் எந்த திட்டமும் வகுக்கவில்லை. வழக்கம்போல் எப்படி விளையாடுவோமோ, அதைத்தான் செய்தோம் என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமும்...! ராஜஸ்தான் ராயல்ஸ்