ETV Bharat / sports

ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்டது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது: சர்ஃபராஸ் கான்! - ஐபிஎல்

மும்பை: ஆர்சிபி அணியிலிருந்து நான் நீக்கப்பட்டது என்னை மனதளவில் பாதிப்படையச் செய்தது என இளம் வீரர் சர்ஃபராஸ் கான் தெரிவித்துள்ளார்.

Was hurt when RCB dropped me: Sarfaraz Khan

author img

By

Published : Jan 27, 2020, 6:12 PM IST

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர பேட்ஸ்மேனாக அறியப்பட்ட சர்ஃபராஸ் கான், அந்த நம்பிக்கையை பொய்யாக்குவதுபோல் சில ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவந்தார். மும்பை ரஞ்சி டிராபி அணியில் இடம் கிடைக்காததையடுத்து, உத்தரப் பிரதேச அணிக்காக இரு ஆண்டுகளாக ஆடினார். ஆனால் அப்போது பேட்டிங்கில் பெரிய ரன்களை அடிக்காத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார்.

அதையடுத்து உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 5ஆவது வீரராக களமிறங்கி 301 ரன்களை அடித்து அசத்தினார். இதனால் மீண்டும் சர்ஃபராஸ் கானின் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து சர்ஃபராஸ் கான் பேசுகையில், '' ரஞ்சி டிராபி போட்டிகளில் முச்சதம் விளாசிய மும்பை வீரர்களான சச்சின், சுனில் கவாஸ்கர், வாசிம் ஜாபர், ரோஹித் சர்மா ஆகியோரின் பட்டியலில் நானும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

2016ஆம் ஆண்டு என்னுடைய உடல்தகுதி காரணமாக ஆர்சிபி அணியிலிருந்து விலக்கப்பட்டேன். அப்போது எனது திறமையின் மீதும், பேட்டிங் பற்றியும் எவ்வித சந்தேகமுமில்லை என விராட் கோலி நேரடியாகவே கூறினார். எனது உடலை நான் அங்கிகரிக்காததால்தான் எனது பேட்டிங் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என கூறினார்.

சர்ஃபராஸ் கான்
சர்ஃபராஸ் கான்

அதையடுத்துதான் நான் எனது உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தினேன். எனது உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டேன். இதனால் எனது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் சரியான அளவில் மாறியது. எனது நண்பர்களும் அணியினரும் என்னை பாண்டா என அழைத்து வந்ததை, மாச்சோ என அழைக்கும் அளவிற்கு எனது உடலை மாற்றியுள்ளேன்.

கடந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடினேன். ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்டதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அந்த சம்பவம் என்னைக் காயப்படுத்தியது என்றார்.

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் பிடிச்சாலும் ஒரு நியாயம் வேணாமா? சஞ்சய் மஞ்ரேக்கர் - ஜடேஜா குசும்புகள்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/was-hurt-when-rcb-dropped-me-sarfaraz-khan/na20200127152855136

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.