இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. இந்திய யு-19 அணிக்காக உலகக்கோப்பையை வென்ற கேப்டன், ரஞ்சி டிராபி அறிமுகப் போட்டியில் சதம், துலீப் டிராபி அறிமுகப் போட்டியில் சதம், டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் சதம், ஊக்கமருந்து சோதனையில் தோல்வி, 8 மாதங்களில் கிரிக்கெட்டிலிருந்து தடை என ப்ரித்வியின் இளம் வயதிலேயே சாதனைகளிக்கும் சர்ச்சைகளுக்கும் நடுவில் சிக்கியவர்.
எதிர்கால இந்தியாவின் சச்சின் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், சச்சின் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில், ''முதல்முறையாக எனது 8 வயதில் சச்சினை சந்தித்தேன். அந்த தருணத்திலிருந்து சச்சின் தான் எனது வழிகாட்டி. அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்று வருகிறேன்.
ஆன் ஃபீல்டிலும், ஆஃப் ஃபீல்டிலும் என்ன செய்ய வேண்டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பல்வேறு விஷயங்கள் கற்றுள்ளேன். நான் இப்போது பயிற்சிக்கு சென்றாலும் சச்சின் அவர்கள் என்னை கண்காணிப்பார். எனது ஆட்டம் பற்றி பேசுவார். டெக்னிக்கலாக அல்லாமல் மனரீதியாக என்னை தயார் செய்வார். எனது பயிற்சியாளர்களுக்கு மத்தியில் சச்சினின் வழிகாட்டுதலோடு எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியுள்ளது பெருமையாக உள்ளது.
எனது கடுமையாக நேரங்களிலும் சச்சின் எனக்காக இருந்துள்ளார்'' என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரின் நினைவுகளை பகிர்ந்த மில்லர்!