2019ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஆலன் பார்டர் பதக்கத்தை வார்னர் கைப்பற்றினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அடுத்தடுத்து இரண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர்கள் நடக்கவுள்ளது. அந்த இரண்டு டி20 உலகக்கோப்பைக்குப் பின் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவேன்.
உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணையைப் பார்த்தேன். மூன்று வகையான ஃபார்மட்களில் ஆடுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. டி20 போட்டிகளைத் தொடர்ந்து ஆட விரும்பும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். டி20 வகை போட்டிகள் மிகவும் சவால் நிறைந்தவை. அதனை டி வில்லியர்ஸ், சேவாக் போன்ற வீரர்கள் பலகாலமாக திறம்பட செய்துவருகின்றனர். ஆனால், அது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.
எனது வீட்டில் மனைவியுடன் மூன்று குழந்தைகள் உள்ளனர். அதனால் தொடர்ந்து பயணம் மேற்கொள்ளவது கடினமானது. அவர்களுக்கான நேரத்தை செலவிட வேண்டும் என விரும்புகிறேன். அதனால் கிரிக்கெட்டின் ஒரு வகையான போட்டிகளைக் கைவிட வேண்டும் என முடிவு செய்தால், அது டி20 ஃபார்மெட்டாக தான் இருக்கும்.
பிபிஎல் தொடரில் எனக்கு அணி இல்லை என்பதால் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில் எனது மனதையும் உடலையும் தயார்படுத்துவதற்காக செலவிட்டேன். அடுத்தத் தொடரை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: சொதப்பிய டாப் ஆர்டர்... அசத்திய மிடில் ஆர்டர்... நியூசி.க்கு 297 ரன்கள் இலக்கு!