ETV Bharat / sports

”இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது” - வக்கார் யூனிஸ்

author img

By

Published : Nov 25, 2020, 6:04 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரில் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமிருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

Waqar expects tight contest between India and Australia

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும்0 விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 27ஆம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் வக்கார் யூனிஸ், இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் குறித்த தமது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய யூனிஸ், “ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால், கூடுதல் பலத்தைப் பெற்றுள்ளது. அதேசமயம் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுடன், வார்னர், ஸ்மித் என அதிரடி வீரர்களும் இத்தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய அணியிலும் பும்ரா, ஷமி ஆகியோர் வேகப்பந்துவீச்சில் கைக்கொடுக்கிறார்கள். மேலும் புஜாரா, ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது அணியின் வெற்றிடத்தை நிரப்ப உதவும். இதனால் இத்தொடரில் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பெயர் பரிந்துரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.