இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன், தனியார் தொலைகாட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் கலந்து கொண்டார்.
அப்போது, திடீரென அவருக்கு உடல் நலை சரியில்லாததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை அறிந்த இவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் கமெண்ட்ரியில் என்ட்ரி தந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "உலகமெங்கும் இருக்கும் என் ரசிகர்களே, வெப்பத்தின் தாக்கத்தால்தான் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது நான் அதில் இருந்து குணமடைந்து, மீண்டும் கமெண்ட்ரியில் இணைந்துள்ளேன்" என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான இவர், கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 70, 80 களில் இவர் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 121 டெஸ்ட், 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.