கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஊரடங்கின் காரணமாக நாட்டின் அனைத்து விதமான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டு மாநில எல்லைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பிழைப்பிற்காக வெளிமாநிலம் சென்றிருந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்து வசதியின்றி நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான வீரேந்திர சேவாக், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்து வரும் குடிபெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தனது வீட்டிலேயே உணவு தயாரித்து உதவி வருகிறார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமது வீட்டிலேயே உணவு சமைத்து பறிமாறும் மகிழ்ச்சி, அரண்மனையில் வசித்தாலும் கிடைக்காது. என பதிவிட்டு, சேவாக் தனது குடும்பத்தினருடன் இணைந்து உணவு சமைத்து, அதனை குடிபெயர் தொழிலாளர்களுக்கு கொடுப்பது போன்ற புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
-
The satisfaction of cooking and packing food from the comfort of your own homes and courtsey the wonderful people at @udayfoundation distributing it to migrant labourers is the beauty of #GharSeSewa .If you would like to offer food seva for 100 people please DM to @SehwagFoundatn pic.twitter.com/Aar4INi64J
— Virender Sehwag (@virendersehwag) May 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The satisfaction of cooking and packing food from the comfort of your own homes and courtsey the wonderful people at @udayfoundation distributing it to migrant labourers is the beauty of #GharSeSewa .If you would like to offer food seva for 100 people please DM to @SehwagFoundatn pic.twitter.com/Aar4INi64J
— Virender Sehwag (@virendersehwag) May 28, 2020The satisfaction of cooking and packing food from the comfort of your own homes and courtsey the wonderful people at @udayfoundation distributing it to migrant labourers is the beauty of #GharSeSewa .If you would like to offer food seva for 100 people please DM to @SehwagFoundatn pic.twitter.com/Aar4INi64J
— Virender Sehwag (@virendersehwag) May 28, 2020
தற்போது சேவாக்கின் இந்த ட்விட்டர் பதிவானது சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. மேலும், சேவாக்கின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.
இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஆஸி.க்கு ரூ. 400 கோடி இழப்பு?