ETV Bharat / sports

எனக்கு ஜோடி அனுஷ்காதான்... கோரிக்கையை முன்வைத்த கோலி! - அனுஷ்கா ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கபடும் படத்தில் அனுஷ்கா ஷர்மா நடிப்பதாக இருந்தால், அதில் தானே நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

Virat Kohli ready to act in his biopic but on one condition

author img

By

Published : May 18, 2020, 12:30 PM IST

கரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது நேரத்தை குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியுடன் இன்ஸ்டாகிராம் நேரலையின் வாயிலாக இணைந்து உரையாற்றினார். அப்போது சுனில் சேத்ரி, உங்களது வாழ்க்கை வரலாறு படம் குறித்தான தகவலை கூறும்படி விராட் கோலியிடம் கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த விராட், ”என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் என் மனைவி அனுஷ்கா ஷர்மா நடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அந்தப்படத்தில் நானே நடிப்பேன். ஏனெனில் அவர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் நபராகவே திகழ்ந்து வருகிறார்.

நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பு மிகவும் சுயநலவாதியாக இருந்தேன். ஆனால் தற்போது நான் செய்யும் அனைத்து செயல்களிலும் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். இது அனைத்திற்கும் முக்கிய காரணம் அனுஷ்கா மட்டும்தான். இதனால் என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் நடிப்பதாக இருந்தால், நிச்சயம் நான் அதில் நடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் சாத்தியமற்றது - பிசிசிஐ
!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.