ETV Bharat / sports

விஸ்டன்: 10 ஆண்டுகளில் ஐந்து சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை!

author img

By

Published : Dec 26, 2019, 1:11 PM IST

கிரிக்கெட் நாளிதழான விஸ்டன், பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் விராட் கோலியையும், வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரியவும் தேர்ந்தெடுத்துள்ளது.

Wisden cricketers of the decade
Wisden cricketers of the decade

இங்கிலாந்து நாட்டின் பழம்பெரும் சர்வதேச கிரிக்கெட் நாளிதழ் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் (Wisden Cricketers' Almanack), 2010 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான தலை சிறந்த வீரர், வீராங்கனைகளின் பெயர்களை அறிவித்துள்ளது.

இதில் ஆடவர் பிரிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், ஏ பி டி வில்லியர்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விராட் கோலி:

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, இந்த பத்தாண்டுகளில் மற்ற சர்வதேச வீரர்களை விட 5,775 ரன்களை அதிகமாக விளாசியுள்ளார். மேலும் இவர் மற்ற அனைத்து நாட்டு வீரர்களை விட 22 சதங்களை அதிகமாகவே அடித்துள்ளார். அதேபோல் தொடர்ந்து ஏழு டெஸ்ட் போட்டிகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்பதாலும் இவரை விஸ்டன் பத்தாண்டுகளில் தலைசிறந்த வீரராக தேர்வு செய்துள்ளது.

விராட் கோலி
விராட் கோலி

ஸ்டீவ் ஸ்மித்:

2010ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித், இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7070 ரன்களை குவித்துள்ளார். இதில் 26 சதங்கள் 27 அரைசதங்களும் அடங்கும். மேலும் 118 ஒருநாள், 36 சர்வதேச டி20 போட்டிகளில் 4023 ரன்களையும் விளாசியுள்ளார்.

ஏ பி டி வில்லியர்ஸ்:

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் இதுவரை 420 சர்வதேச போட்டிகளில் விளையாடி 20,014 ரன்களை குவித்துள்ளார். மேலும் இவர் கடந்தாண்டும் மே மாதம் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதகாவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெயின்:

வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின்
வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின், அனைத்து விதமான கிரிக்கெடையும் சேர்த்து மொத்தமாக 262 போட்டிகளில் 696 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

எல்லிஸ் பெர்ரி:

ஆஸ்திரேலிய மகளிர் ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக வலம் வருபவர் எல்லிஸ் பெர்ரி. இவர் இதுவரை 112 ஒருநாள், 111 டி20 போட்டிகளில் பங்கேற்று 4023 ரன்களையும், 289 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:விஸ்டன் வெளியிட்ட புதிய அணி..! மாஸ் காட்டிய ’தல, தளபதி’!

Intro:Body:

Virat Kohli, Ellyse Perry among five Wisden cricketers of the decade - Bharathi

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.