2023ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியாக உலகக் கோப்பை இரண்டாம் டிவிஷன் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இதில், நேபாளம், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, நமிபியா உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், நேபாளம் - அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேபாளத்தின் கிரித்திபூரில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி அமெரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி, நேபாளம் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லாமிச்சேன் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 12 ஓவர்களிலேயே 35 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் குறைந்த ஸ்கோரில் ஆல் அவுட்டான அணிகளின் பட்டியலில் அமெரிக்கா ஜிம்பாப்வேவுடன் முதலிடத்தை பகிரந்துகொண்டுள்ளது. 2004இல், இலங்கை அணிக்கு எதிராக ஹராரேவில் நடந்த ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 35 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கனத்துக்குரியது.
இப்போட்டியில் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய அமெரிக்க அணியின் தொடக்க வீரர் ஸாவியர் மார்ஷல் இரண்டு பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் அடித்தார். அவரைத் தவிர அணியில் இருந்த ஆறு வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களிலும், நான்கு பேர் டக் அவுட்டும் ஆகினர். தனது சுழற்பந்துவீச்சினால் அமெரிக்க அணியின் பேட்டிங்கைத் திணறிடித்த லாமிச்சேன் ஆறு ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே வழங்கி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில், ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.
-
It was spinners' day out in Kirtipur as Nepal registered a record win over USA in today's #CWCL2 encounter.
— ICC (@ICC) February 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
How brilliant was Sandeep Lamichhane?https://t.co/JaV1O909TA
">It was spinners' day out in Kirtipur as Nepal registered a record win over USA in today's #CWCL2 encounter.
— ICC (@ICC) February 12, 2020
How brilliant was Sandeep Lamichhane?https://t.co/JaV1O909TAIt was spinners' day out in Kirtipur as Nepal registered a record win over USA in today's #CWCL2 encounter.
— ICC (@ICC) February 12, 2020
How brilliant was Sandeep Lamichhane?https://t.co/JaV1O909TA
இதைத்தொடர்ந்து, 36 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 5.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டி 11.09 மணிக்கே முடிந்தவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 39 நிமிடத்திற்குள் ஒரு நாள் போட்டி முடிவடைவது இதுவே முதல்முறையாகும். இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய லாமிச்சேன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.