ETV Bharat / sports

ஜிம்பாப்வே தொடருக்கான அணியை அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம்! - UAE cricket club

துபாய் : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள 14 பேர் கொண்ட அணியை ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே
author img

By

Published : Apr 9, 2019, 10:00 AM IST

ஜிம்பாப்வே - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. ஐசிசி-யின் நிரந்தர உறுப்பு நாட்டு அணியுடன் ஐக்கிய அரபு அமீரக அணி மோதும் முதல் தொடர் இதுவாகும்.

இதற்கான 14 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு முகமது நவீத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறுகையில், 'இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரக அணியின் திறமையை பரிசோதிப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், ஐசிசி-யின் உறுப்பினர் அல்லாத நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சி குறித்து அறிவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும்' என தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் அணி விவரம் :

முகமது நவீத் (கேப்டன்), ரோஹன் முஸ்தபா, அஷ்பக் அகமது, ஷைமன் அன்வர், முகமது உஸ்மான், சிபி ரிஸ்வான், சிராஜ் சூரி, முகமது பூட்டா, குலாம் ஷபீர், சுல்தான் அகமது, இம்ரான் ஹைதர், அமிர் ஹயட், ஜகூர் கான், குவாதிர் அஹமது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.