2020ஆம் ஆண்டிற்கான ஐசிசி யு-19 உலகக்கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இதில் சூப்பர் லீக் காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 234 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா நிர்ணயித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கின்போது 31ஆவது ஓவரை இந்திய பந்துவீச்சாளர் அதர்வா வீசினார். அதனை எதிர்கொண்ட ஆஸ்திரேலியாவின் சாம் ஃபேன்னிங் ரன் ஓடும்போது தனது முழங்கையால் அதர்வாவைத் தாக்கினார்.
இதையடுத்து களநடுவர்களால் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. பின்னர் போட்டி முடிவடைந்த பின் சாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அந்த விசாரணையில் சாம்தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார்.
இதனால் ஐசிசி விதிமுறையான ஆர்டிகிள் 2.12வான களத்தில் மற்ற வீரர்கள் மீது தாக்கு முயன்றதால் சாம் ஃபேன்னிங்கிற்கு 2 நெகட்டிவ் புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: 'இந்த வெற்றியை வில்லியம்சன் பெற்றிருக்க வேண்டும்' - கோலி