ETV Bharat / sports

என்னை ரூ.1.71 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்தனர்: சோயப் அக்தர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சமீபகாலமாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். தற்போது 1999ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த கார்கில் போர் குறித்த சர்ச்சைக் கருத்தை பதிவுசெய்துள்ளார்.

சோயப் அக்தர்
சோயப் அக்தர்
author img

By

Published : Aug 4, 2020, 4:08 AM IST

கராச்சி: 1999ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த கார்கில் போர் குறித்த சர்ச்சைக் கருத்தை பதிவுசெய்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்(44). இவர் வீசும் பந்துகளை கண்டு பயந்த காலம் போய், தற்போது இவர் என்ன சர்ச்சை கருத்தை பதிவிடப்போகிறார் என்ற பயம் அனைவரின் மனதிற்குள்ளும் உண்டு. இவர் 1999ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த கார்கில் போர் குறித்த சர்ச்சைக் கருத்தை பதிவுசெய்துள்ளார்.

அவர் பதிவில், “1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்காக நாட்டிங்காம்ஷயர் அணி ரூ. 1.71 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்தது. அப்போது கார்கில் போர் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வாய்ப்பை மறுத்துவிட்டேன். அதன்பின், 2002ஆம் ஆண்டு மற்றொரு ‘கவுன்டி’ அணிக்காக விளையாட கிடைத்த வாய்ப்பையும் நிராகரித்துவிட்டேன். இதனால் அந்த அணி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.

தோனி தன் கடைசி போட்டியை இந்தியாவுக்காக மகிழ்ச்சியாக ஆடிவிட்டார்: ஆஷிஷ் நெஹ்ரா

போர் நடந்த போது லாகூருக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு ராணுவ ஜெனரல், இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்டார். ‘போர் தொடங்கப் போகிறது. அனைவரும் சேர்ந்தே மடிவோம், என்றேன். இந்தியாவில் இருந்து வந்த விமானங்கள், எங்களின் சில மரங்களை சாய்த்துவிட்டன. இச்சம்பவம் என்னை வேதனையடையச் செய்தது” என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.