சம காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்டாலும், ரிவ்யூ எடுப்பதில் அவரது சாதனை படுமோசமாக உள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேனாக அவர் எடுத்த ரிவ்யூக்கள் அனைத்தும் தவறாகவே இருந்துள்ளன. அதே சமயம் எதிரணி பேட்டிங்கின்போது தனது பந்து வீச்சில் ரிவ்யூ எடுக்கக்கோரி ஜடேஜா பலமுறை கோலியிடம் கேட்டுக்கொள்வார்.
அதன்படி கோலியும் ரிவ்யூ எடுக்க, அவையும் பல நேரங்களில் அணிக்கு பலனளிக்காமலே போய் உள்ளன.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலி ரிவ்யூ எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், ”நான் ரிவ்யூ கேட்கவில்லை, அதை யார் கேட்கிறார்கள் என்று பாருங்கள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவை கண்ட கோலி, ”இது அவுட்டாக தான் இருக்கும் எனக்கூறி நீங்கள் ரிவ்யூ எடுக்க சொல்வீர்கள். ஆனால் ரிவ்யூ எடுத்த பிறகுதான் அது அவுட்டா இல்லையா என்ற சந்தேகமே உங்களுக்கு வரும்” எனக் கலாய்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
கரோனா தொற்று காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.