கரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐ.பி.எல்., தொடரின் மூன்றாவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகேந்திர சிங் தோனி குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய டிராவிட், "தோனி ஒரு மிகச் சிறந்த வீரர். அவர் இருக்கும் வரையில் நம்ம ஆட்டத்தின் முடிவு குறித்து எந்த ஒரு கணிப்பையும் செய்ய இயலாது.
அவர் ஆட்டத்தின் இறுதியில் விளையாடும்போது தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியை பலமுறை வெற்றி பெறச்செய்துள்ளார்.
இவரின் இந்த தனித்துவமான திறமையை கண்டு நான் பலமுறை ஆச்சரியப்பட்டு உள்ளேன். அது அவருக்கு இயற்கையாகவே கிடைத்ததா? அல்ல அதற்கென தனியாக பயிற்சிகள் ஏதேனும் மேற்கொண்டாரா? என்று நான் அவரிடம் கேட்க வேண்டும்.
ஆனால் நான் ஒருபோதும் அது போன்று ஒரு முயற்சியை மேற்கொண்டது கூட கிடையாது" என தெரிவித்துள்ளார்.