ETV Bharat / sports

விராட் கோலியோடு பாபர் அஸாமை ஒப்பிட சரியான தருணம் அல்ல...! - Dont campare Kohli and Babar

லாகூர்: இந்திய கேப்டன் விராட் கோலியோடு பாகிஸ்தான் ஒருநாள் அணி கேப்டன் பாபர் அஸாமை ஒப்பிட இது சரியான நேரம் அல்ல என பாகிஸ்தான் ஜாம்பவான் யூனுஸ் கான் தெரிவித்துள்ளார்.

too-early-to-compare-babar-azam-and-virat-kohli-feels-younis-khan

author img

By

Published : May 18, 2020, 1:16 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக இளம் வீரர் பாபர் அஸாம் சில நாள்களுக்கு முன்னதாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே பாபர் அஸாமை பாகிஸ்தானின் விராட் கோலி எனப் பேசி வந்தவர்களுக்கு, கேப்டன்ஷிப் நியமினம் இன்னும் அதிகமாக பேசக் காரணமாக அமைந்தது. இதனிடையே கேப்டன்ஷிப்பால் பாபரின் ஆட்டம் பாதிக்கும் என்றும் கருத்துக்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் யூனுஸ் கான் பேசுகையில், '' பாகிஸ்தான் ஒருநாள் அணி கேப்டன் பாபர் அஸாமை இந்திய அணி கேப்டன் விராட் கோலியோடு ஒப்பிடுவதற்கு இது சரியான தருணம் அல்ல. ஏனென்றால் கடந்த பத்து ஆண்டுகளில் விராட் கோலி தனது பெயரில் 70 சதங்கள் அடித்து அனைத்து சூழல்களிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

மறுபக்கம் பாபர் அஸாம் சில ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 16 சதங்கள் விளாசியுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நல்ல ஆவரேஜ் வைத்துள்ளார். ஆனால் விராட் கோலி அளவிற்கு பாபர் ஆதிக்கம் செலுத்தவில்லை.

இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு, இருவரையும் ஒப்பிடலாம். நிச்சயம் அதற்கு தகுதியான நபராக பாபர் தன்னை வளர்த்துக்கொள்வார்.

எனது இறுதி கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் பாபர் அணிக்குள் வந்தார். அவரின் குணமும், அனைவருடன் அவர் பேசும் விதமும் என்னை அதிகமாக ஈர்த்தது. எந்த வீரர் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துகிறாரோ, அவர் எதிர்காலத்தில் பெரிய வீரராக வலம் வருவார். பாபர் அஸாம் எப்போதும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்.

கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அணியில் உள்ள சில சீனியர் வீரர்களை எவ்வாறு நடத்தவேண்டுமென பாபருக்கு தெரியும்'' என்றார்.

இதையும் படிங்க: எனக்கு ஜோடி அனுஷ்காதான்... கோரிக்கையை முன்வைத்த கோலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.