இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அறிமுக வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு பங்கேற்றார்.
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைக் குவித்தது. பின்னர் வெற்றியை நோக்கிய விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய நடராஜன் தங்கராசு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
-
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91 #AUSvsIND pic.twitter.com/tq8ScEWPSs
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91 #AUSvsIND pic.twitter.com/tq8ScEWPSs
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 2, 2020இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91 #AUSvsIND pic.twitter.com/tq8ScEWPSs
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 2, 2020
அந்த வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் வாயிலாக நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சரின் ட்விட்டர் பதிவில், “இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மாலன் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை 'ஒயிட் வாஷ்' செய்த இங்கிலாந்து!