ETV Bharat / sports

பெங்கால் டி20 சேலஞ்ச்: மூன்று வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி!

கொல்கத்தா: பெங்கால் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Three cricketers and an official test positive for COVID-19 ahead of Bengal T20 Challenge

author img

By

Published : Nov 21, 2020, 3:45 PM IST

கொல்கத்தா மாநிலத்தின் உள்ளூர் டி20 தொடரான பெங்கால் டி20 சேலஞ்ச் நவம்பர் 24ஆம் தேதி முதல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் என 142 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையின் முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணியைச் சேர்ந்த அபிஷேக் ராமன், மோகன் பாகன் அணியைச் சேர்ந்த விருத்திக் சாட்டர்ஜி உள்பட மூன்று வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் கொல்கத்தா கஸ்டம்ஸ் அணியின் அலுவலர் பார்த்தா பிரதிம் சென்னிற்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் குழுவால் கண்காணிப்பட்டுவருகின்றனர்.

இது குறித்து பெங்கால் கிரிக்கெட் வாரியம் (சிஏபி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்கால் டி20 சேலஞ்ச் தொடருக்கு முன்பாக வீரர்கள், நிர்வாகிள் என 142 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையின் முடிவில் நான்கு பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிஏபியின் மருத்துவக் குழு கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஐஎஸ்எல் 2020-21: நார்த் ஈஸ்ட் யுனைடெட் vs மும்பை சிட்டி எஃப்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.