கிரிக்கெட்டில் அண்டர்ரேட்டட் அணியாகத் திகழும் தென் ஆப்பிரிக்க அணி சமீப நாள்களாக மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திவருகிறது. அந்தவகையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரிலும் படுதோல்வி அடைந்தது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா அணி, அதன்பின் புனே ராஞ்சியில் நடைபெற்றப் போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. ஹசிம் ஆம்லா, ஸ்டெயின் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வுபெற்றதால், தென் ஆப்பிரிக்க அணி முன்பை போல் இல்லாமல் சற்று பலவீன அணியாக மாறியுள்ளது.
-
This South African Test team is a real concern for the game .. The game needs South Africa to be strong .. Time for @markb46 to take over .. also why wouldn’t you use @GraemeSmith49 & @jacqueskallis75 is some capacity .. #INDvsSA
— Michael Vaughan (@MichaelVaughan) October 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This South African Test team is a real concern for the game .. The game needs South Africa to be strong .. Time for @markb46 to take over .. also why wouldn’t you use @GraemeSmith49 & @jacqueskallis75 is some capacity .. #INDvsSA
— Michael Vaughan (@MichaelVaughan) October 22, 2019This South African Test team is a real concern for the game .. The game needs South Africa to be strong .. Time for @markb46 to take over .. also why wouldn’t you use @GraemeSmith49 & @jacqueskallis75 is some capacity .. #INDvsSA
— Michael Vaughan (@MichaelVaughan) October 22, 2019
தென் ஆப்பிரிக்க அணியின் இந்த நிலை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டரில், "தற்போது உள்ள தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டி மீது அக்கறை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெஸ்ட் போட்டியில் அந்த அணி வலிமை பெறவதற்கு மார்க் பவுச்சர், கிரேம் ஸ்மித், ஜாக் காலிஸ் ஆகியோர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது" எனப் பதிவிட்டார்.
வாகன் குறிப்பட்டதைப் போலவே, 2002-03இல் படுமோசமான நிலையிலிருந்த தென் ஆப்பிரிக்க அணி, கிரேம் ஸ்மித்தின் கேப்டன்ஷிப்பிற்கு பிறகுதான் சிறந்த அணியாக மீண்டும் மாறியது. இதற்கு மார்க் பவுச்சர், ஜாக் காலிஸ் ஆகியோர் முக்கிய பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.