ETV Bharat / sports

'264 ரன்கள்' ஒரு அணியின் ஸ்கோர் அல்ல; ஒரு வீரரின் ஸ்கோர்: ஹிட்மேன் உருவான நாள் இன்று! - ரோஹித் ஷர்மா

ஒரு காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடிப்பது என்பது பலருக்கும் கனவாக இருந்தது. அந்தக் கனவை முதல்முதலாக எட்டிப்பிடித்தது சச்சின் டெண்டுல்கர்தான். அவர் விதைபோட்டுத் தொடங்கிவைக்க, அதன்பின் 8 முறை 200 ரன்களை கிரிக்கெட் வீரர்கள் கடந்துள்ளனர்.

this-day-that-year-rohit-sharma-scored-highest-individual-score-in-odis

author img

By

Published : Nov 13, 2020, 5:50 PM IST

இந்த எட்டு இன்னிங்ஸ்களையும் மறைக்கும் அளவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸை ஆடியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான இவர் அடித்த 264 ரன்கள்தான், இன்றுவரை ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

இந்த இன்னிங்ஸிற்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணியுடன் ரோஹித் ஏற்கனவே ஒருமுறை 200 ரன்களைக் கடந்துள்ளார். இதனால் இலங்கை அணியுடன் ஆடிய இந்த இன்னிங்ஸின்போது, ஓய்விலிருந்த தோனி ரோஹித் பற்றி ஒரு ட்வீட்டை பதிவிட்டார்.

அது என்னவென்றால், 45 ஓவர்களுக்குள் ரோஹித் 200 ரன்களைக் கடந்துவிட்டால், நிச்சயம் 250 ரன்களை அடித்து ரோஹித் சாதனை படைப்பார் என்றிருந்தது. தோனி சொன்னதுபோலவே, 45 ஓவர்களுக்குள் 200 ரன்களை கடந்த ரோஹித், 49ஆவது ஓவரில் 250 ரன்களைக் கடந்தார்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

264 ரன்கள் அடித்திருந்தபோது, குலசேகரா வீசிய கடைசி பந்தில் ரோஹித் ஆட்டமிழந்தார். அந்த இன்னிங்ஸில் 33 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். இந்தப் போட்டிக்கு பின், ஒவ்வொரு முறை ரோஹித் 50 ரன்களை கடந்துவிட்டாலே, இன்று ஒரு 200 ரன் ஆட்டத்தை ஆடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதுதான் ரோஹித் இந்த இன்னிங்ஸ் மூலம் ஏற்படுத்திய தாக்கம்.

  • #OnThisDay in 2014, a @ImRo45 record 💥💥

    12......1.......11...41.1.4.1..11.1.41..4141...211...1.1......1111111.11114121..414..2114114.644.1114111.64.141.144.64.1111141.11161.1.21..61144414114441466.4.1414464161141☝️ pic.twitter.com/khn9525MjB

    — ICC (@ICC) November 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அன்றிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் என்ற பெயரின் அடைமொழியாக ஹிட்மேன் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. இந்த இன்னிங்ஸ் பற்றி இன்றைய கேப்டன் விராட் கோலி பேசுகையில், ''என் குழந்தையிடம், இந்த இன்னிங்ஸை நேரில் அமர்ந்து பார்த்து ரசித்தவன் என்று பெருமையுடன் சொல்வேன்'' என்றார்.

  • #OnThisDay in 2014, @ImRo45 created history by smashing 264 - the highest individual score in the ODIs 👊👌

    A 🔝 knock that included 3⃣3⃣ fours and 9⃣ sixes 💥💥#TeamIndia

    Watch that splendid knock here 👇📽️

    — BCCI (@BCCI) November 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ஐசிசியின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்த ஹிட்மேன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.