இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிச.17ஆம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனது குழந்தை பிறப்பு காரணமாக கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியோடு விடுப்பு எடுத்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கெனவே அஜிங்கியா ரஹானே துணை கேப்டனாக இருப்பதால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவரே கேப்டனாக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா அணியில் இடம்பிடிப்பார் என்பதால், டெஸ்ட் அணியை ரோஹித் வழிநடத்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கார், “இத்தொடரில் அஜிங்கியா ரஹானேவின் கேப்டன்சி குறித்த அழுத்தம் ஏதும் இல்லை. ஏனெனில் அவர் இதற்கு முன்னதாக இருமுறை இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தி, தொடரை வென்றுள்ளார். இதனால் அவர் அணியை விழிநடத்துவதில் எந்த பிரச்னையும் இருக்காது.
என்னைப் பொறுத்தவரை ரஹானேவின் கேப்டன்சி குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவர் தனது பணியை திறம்பட செய்யக்கூடிய நபர். மேலும் தனது பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்தும் நபர். அதனால் இத்தொடரில் ரஹானேவின் பங்கு அதிகளவில் இருப்பது நாம் அறிந்த ஒன்றே” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:லாலிகா: மெஸ்ஸியின் கோலால் பார்சிலோனா அசத்தல் வெற்றி!