நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய இதுவரை எந்த நாடுகளும் முயற்சி செய்யாதபோது, சந்திரயான் 2 திட்டத்தின்மூலம் இஸ்ரோ இப்பரிசோதனையை செய்ய முயற்சித்தது. இதற்காக, இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து தொலைதூரம் கொண்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2ஆம் தேதி பிரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 1:30 மணி அளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலவின் தென்பகுதியில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தூரம் இருந்தபோது விக்ரம் லேண்டரிலிருந்து சமிக்ஞை (சிக்னல்) துண்டிக்கப்பட்டது. இதனால், இஸ்ரோ தலைவர் சிவன், இத்திட்டத்தில் பணிபுரிந்த ஆராய்ச்சியாளர்கள் சோகத்தில் இருந்தனர்.
இதையடுத்து, அவர்களது இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, நான் உங்களுடன் இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம் - சேர்ந்து பயணிப்போம் என அவர்களுக்கு ஊக்கமளித்தார்.
-
There's nothing like failure in science, we experiment & we gain. Massive respect for the scientists at #ISRO who worked relentlessly over days & nights. The nation is proud of you, Jai Hind! 🇮🇳 #Chandrayan2
— Virat Kohli (@imVkohli) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">There's nothing like failure in science, we experiment & we gain. Massive respect for the scientists at #ISRO who worked relentlessly over days & nights. The nation is proud of you, Jai Hind! 🇮🇳 #Chandrayan2
— Virat Kohli (@imVkohli) September 7, 2019There's nothing like failure in science, we experiment & we gain. Massive respect for the scientists at #ISRO who worked relentlessly over days & nights. The nation is proud of you, Jai Hind! 🇮🇳 #Chandrayan2
— Virat Kohli (@imVkohli) September 7, 2019
இந்த நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ட்வீட் செய்துள்ளார். அதில், "அறிவியலில் தோல்வி என்பதே கிடையாது. நாம் பல மேம்பட்ட சோதனைகள் செய்து அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறுகிறோம். இத்திட்டத்திற்காக, இரவும் பகலும் கடினமாக உழைத்த இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். ஒட்டுமொத்த நாடே உங்களை நினைத்து பெருமைப்படுகிறது" எனப் பதிவிட்டிருந்தார்.