ETV Bharat / sports

குளோபல் டி20: எட்மண்டன் ராயல்ஸ்அணியை வீழ்த்தியது மாண்ட்ரீல் டெக்கர்ஸ்!

ஒன்டாரியோ: குளோபல் டி20 தொடரில் எட்மண்டன் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாண்ட்ரீச் டெக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது.

The Montreal Deckers beat the Edmonton Royals
author img

By

Published : Aug 1, 2019, 3:41 AM IST

குளோபல் டி20 போட்டியின் ஒன்பதாவது லீக் போட்டியில் டூ பிளிசிஸ் தலைமையிலான எட்மண்டன் ராயல்ஸ் அணியும், பெய்லீ தலைமையிலான மாண்ட்ரீல் டெக்கர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற டெக்கர்ஸ் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

சிறப்பாக பந்து வீசிய தில்லன் ஹெய்லிகர்
சிறப்பாக பந்து வீசிய தில்லன் ஹெய்லிகர்

இதையடுத்து, களமிறங்கிய ராயல்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் டூ பிளிசிஸ் மட்டும் தனி ஆளாக, அணியை வழிநடத்தி சென்றார். அவர் 20 பந்துகளில் 55 ரன்களை விளாசினார்.

இதன் மூலம் 19.3 ஓவர்களில் எட்மண்டன் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை எடுத்தது. டெக்கர்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய தில்லன் ஹெய்லிகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கைல் கோட்ஸர்

அதன் பின் களமிறங்கிய டெக்கர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கைல் கோட்ஸர் 62 ரன்களை குவித்தார். சிறப்பாக பந்து வீசிய தில்லன் ஹெய்லிகர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.