இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒன்றிலும் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் காலை 9.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ மட்டுமே தொடரைக் கைப்பற்றுவதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்ற நிலை உள்ளது.
அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்திலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறிய நிலையில், நாளைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரைச் சமன்செய்யும் என்ற சூழலில் களமிறங்கவுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுமா இந்தியா?
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும் அடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து சாதித்தது.
அதிலும் அகமதாபாத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும் அசத்தியிருந்தது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது.
-
Training ✅@Paytm #INDvENG pic.twitter.com/G7GCV1EA8U
— BCCI (@BCCI) March 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Training ✅@Paytm #INDvENG pic.twitter.com/G7GCV1EA8U
— BCCI (@BCCI) March 1, 2021Training ✅@Paytm #INDvENG pic.twitter.com/G7GCV1EA8U
— BCCI (@BCCI) March 1, 2021
இத்தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஃபார்மில் உள்ளதால், நாளைய போட்டியிலும் அவரது அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்தத் தொடரில் புஜாரா, ரஹானே ஆகியோரது ஃபார்ம் குறித்த கேள்விகள் அதிகரித்துவருகின்றன.
இதன் காரணமாக நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவே வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும் பந்துவீச்சைப் பொறுத்தவரை அஸ்வின், அக்சர் பட்டேல் இணை இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையைத் தொடர்ந்து நிலைகுலையச் செய்துவருகிறது.
-
Fielding drills ✅@Paytm #INDvENG pic.twitter.com/fAdEKZ2YYA
— BCCI (@BCCI) March 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Fielding drills ✅@Paytm #INDvENG pic.twitter.com/fAdEKZ2YYA
— BCCI (@BCCI) March 2, 2021Fielding drills ✅@Paytm #INDvENG pic.twitter.com/fAdEKZ2YYA
— BCCI (@BCCI) March 2, 2021
அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரது இடத்தை உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ் நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரைச் சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றிருந்தாலும், இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பிவந்த நிலையில், மூன்றாவது போட்டியில் களமிறங்கிய அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஃபோக்ஸ் ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவருவதால், நாளைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பல மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
பந்துவீச்சு வரிசையில் ஜாக் லீச் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, தற்போது அவருடன் கேப்டன் ஜோ ரூட்டும் அணிக்கு கைகொடுத்துவருகிறார். வேகப்பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர் என முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும், அவர்களது வேகம் இங்கிலாந்து அணிக்கு உதவவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இதன் காரணமாக நாளைய போட்டியில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரைச் சமன்செய்ய முடியும் என்பதால், இங்கிலாந்து அணி இப்போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
மைதானம்
நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த மைதானத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி (பகலிரவு) இரண்டு நாள்களிலேயே முடிவடைந்தது.
இதனால் அகமதாபாத் மைதானம் குறித்து சர்ச்சைகள் நிலவிவருகின்றன. அதிலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிகளுக்குத் தகுதியற்றது என ஐசிசியிடமும் முறையிட்டனர்.
இச்சூழலில் நாளை நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் மைதானத்தின் பங்களிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
அணி விவரம்
இந்தியா : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாக் கிரௌலி (Zak Crawly), பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஒல்லி போப், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
இதையும் படிங்க: அகமதாபாத் மைதானத்தை கேலி செய்யும் மைக்கேல் வாகன்!