கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் விளையாட்டுச் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, சச்சின் மற்றும் வார்னே இடையிலான நட்பு குறித்து விளக்கியுள்ளார்.
பிரெட் லீ அளித்துள்ள பேட்டியில், “சச்சின் மற்றும் வார்னே இருவரும் எதிரெதிராக போட்டியிடும்போது, அந்தப் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் வார்னே எப்படி பந்துகளை வீசினாலும் சச்சின் அதனை சரியாக கணித்து விளையாடிவிடுவார். மேலும் சச்சின் சில சமயங்களில் தனது பின்னங்காலை உயர்த்தாமல் வார்னேவின் பந்துகளை எதிர்கொளவார். இவர்கள் இருவரும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் எலியும் பூனையும் விளையாடுவது போன்று இருக்கும்.
ஆனால் வார்னே மிகச்சிறந்த பந்துவீச்சாளர். உலகின் மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு வார்னே புலியாகவே தெரிவார். ஆனால் சச்சினைப் பொறுத்தவரை வார்னே என்றும் எலிதான்.
எனக்கு 22 வயதிருக்கும்போது நான் சச்சினுக்கு பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் சச்சினின் விக்கெட்டையும் நான் கைப்பற்றினேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதன்பின் ஆட்டம் எங்கள் அணிக்கு சாதகமாகிவிட்டது என்று நான் மீண்டும் பந்துவீசுவதை தொடர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:யார்க்ஷயர் அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அஸ்வின்
!