நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டிச.18ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று (டிசம்பர் 12) அறிவிக்கப்பட்டது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் ஆகியோர் இரண்டாவது டி20 போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்கள் லோக்கி ஃபர்குசன், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முதல் டி20 போட்டிக்கான அணியில் டிக்கர், மார்க் சாப்மேன், பிரேஸ்வெல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ராஸ் டெய்லர், மோசமான ஃபார்ம் காரணமாக டி20 அணியிலிருந்து நீக்கப்படுவதாக, நியூசிலாந்து கிரிக்கெட் தேர்வாளர் கவின் லார்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லார்சன், “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடவில்லை. மேலும் கிளென் பிலிப்ஸ், டெவன் கான்வே ஆகியோரது ஆட்டம், அவர்களின் திறன் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மற்ற பேட்ஸ்மேன்களும் டெய்லரை விட சிறப்பாக செயல்படுவதால், நியூசிலாந்து அணியில் அவருக்கு இடமளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
-
JUST IN: New Zealand have announced their squads for the T20Is against Pakistan 🏏
— ICC (@ICC) December 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kane Williamson and Trent Boult, who were rested for the West Indies series, have returned to the side.
Lockie Ferguson and Hamish Bennett have been ruled out with injuries. pic.twitter.com/8iYdBx9E58
">JUST IN: New Zealand have announced their squads for the T20Is against Pakistan 🏏
— ICC (@ICC) December 12, 2020
Kane Williamson and Trent Boult, who were rested for the West Indies series, have returned to the side.
Lockie Ferguson and Hamish Bennett have been ruled out with injuries. pic.twitter.com/8iYdBx9E58JUST IN: New Zealand have announced their squads for the T20Is against Pakistan 🏏
— ICC (@ICC) December 12, 2020
Kane Williamson and Trent Boult, who were rested for the West Indies series, have returned to the side.
Lockie Ferguson and Hamish Bennett have been ruled out with injuries. pic.twitter.com/8iYdBx9E58
நியூசிலாந்து அணி விவரம்:
முதல் டி20: மிட்செல் சாண்ட்னர் (கே), டாட் ஆஸ்டில், டக் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மார்ட்டின் கப்தில், ஸ்காட் குகலீன், ஜேம்ஸ் நீஷாம், க்ளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், இஷ் சோதி, பிளேர் டிக்னர்.
இரண்டாவது & மூன்றாவது டி20: கேன் வில்லியம்சன் (கே), டோட் ஆஸ்டில், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, மார்ட்டின் கப்தில், கைல் ஜேமீசன், ஸ்காட் குகலீன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷாம், க்ளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், இஷ் சோதி, டிம் சவுதி.
இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்கா அணியின் டெஸ்ட் கேப்டனாக டி காக் நியமனம்!