கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருவதால், கிரிக்கெட் போட்டிகளையும் பார்வையாளர்களின்றி நடத்துவது குறித்து ஐசிசி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ‘பார்வையாளர்களின்றி நடக்கும் கிரிக்கெட் போட்டியின்போது வீரர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி விளையாடுவதை கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை. மேலும் ஐசிசி, வீரர்களுக்கு என தனி கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதனை நாங்கள் அனைவரும் பின்பற்றுவோம்.
ஏனெனில் இது நான் கேப்டனாக செயல்படவுள்ள முதல் உலகக்கோப்பைத் தொடராகும். அதன் காரணமாகவே இத்தொடர் நடைபெற வோண்டும் என்று விரும்புகிறேன். இருப்பினும் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டால் நாங்கள் விளையாடுவது மிகவும் கடினமானதாக இருக்கும். அதனால் வீரர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் மைதானத்தில் களமிறங்குவது அவசியம்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐசிசி சார்பில் மே 28ஆம் தேதி நடைபெறவுள்ள கிரிக்கெட் சங்க உறுப்பினர்களின் கூட்டத்தில், டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்துவது மற்றும் ஒத்திவைப்பது குறித்தான விவாதங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பேட்டிங் நிலைப்பாடு குறித்து மனம் திறந்த கோலி!