இந்த ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லெக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், குரூப் பி பிரிவுக்கான இன்றைய போட்டியில் தமிழ்நாடு அணி, பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியது.
இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் மயாங்க் மார்கண்டே 33 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர், எம். சித்தார்த் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 95 ரன்கள் என்ற ஈஸியான டார்கெட்டை சேஸ் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணி 8.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை மட்டுமே எடுத்து திணறியது. ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபக்கம் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு ஏற்றவாறு விஜய் சங்கரும் கம்பனி தர, தமிழ்நாடு அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு கடைசி எட்டு பந்துகளில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், விஜய் சங்கர், எம். முகமது ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், தமிழ்நாடு அணிக்கு நான்கு பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்ட போது, சித்தார்த் கவுல் வீசிய பந்தை வாஷிங்டன் சுந்தர் பவுண்டரி அடித்து மேட்சை ஃபினிஷ் செய்தார். வாஷிங்டன் சுந்தர் 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
-
Washington steers TN to a win!
— TNCA (@TNCACricket) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He remains unbeaten on 45 as TN notch up consecutive wins in the Super League phase. #TNvPUN #SyedMushtaqAliTrophy #SuperLeague pic.twitter.com/D7nLMKDG5w
">Washington steers TN to a win!
— TNCA (@TNCACricket) November 25, 2019
He remains unbeaten on 45 as TN notch up consecutive wins in the Super League phase. #TNvPUN #SyedMushtaqAliTrophy #SuperLeague pic.twitter.com/D7nLMKDG5wWashington steers TN to a win!
— TNCA (@TNCACricket) November 25, 2019
He remains unbeaten on 45 as TN notch up consecutive wins in the Super League phase. #TNvPUN #SyedMushtaqAliTrophy #SuperLeague pic.twitter.com/D7nLMKDG5w
இதனால், தமிழ்நாடு அணி 19.3 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 98 ரன்களை எடுத்து, இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், தமிழ்நாடு அணி சூப்பர் லெக் குரூப் பி பிரிவில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என எட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள மற்றொரு குரூப் போட்டியில் தமிழ்நாடு அணி, ஜார்கண்ட் அணியுடன் மோதவுள்ளது.