உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 38 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதி போட்டிக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, கேதார் தேவ்தார் தலைமையிலான பரோடா அணியை எதிர்கொண்டது.
நேற்று (ஜன.31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய பரோடா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் தேவ்தார் 16 ரன்களிலும், நினத் ரத்வா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
தொடர்ந்து வந்த சொலன்கி நிதானமாக விளையாடி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர்கள் முடிவில் பரோடா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு ஹரி நிஷாந்த் - ஜெகதீசன் இணை தொடக்கம் தந்தது. இதில் ஜெகதீசன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த பாபா அபாரஜித் 29 ரன்களிலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹரி நிஷாந்த் - ஷாரூக் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதனால் 18 ஓவர்களிலேயே தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
-
Mr @JayShah, Honorary Secretary, BCCI, hands over the @Paytm #SyedMushtaqAliT20 Trophy to the Tamil Nadu skipper @DineshKarthik. 👏🏆 pic.twitter.com/drv5eGAldn
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mr @JayShah, Honorary Secretary, BCCI, hands over the @Paytm #SyedMushtaqAliT20 Trophy to the Tamil Nadu skipper @DineshKarthik. 👏🏆 pic.twitter.com/drv5eGAldn
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021Mr @JayShah, Honorary Secretary, BCCI, hands over the @Paytm #SyedMushtaqAliT20 Trophy to the Tamil Nadu skipper @DineshKarthik. 👏🏆 pic.twitter.com/drv5eGAldn
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021
இந்த வெற்றியின் மூலம் சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதித்துள்ளது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மணிமாறன் சித்தார்த் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மன் கி பாத்: ஆஸி., டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு!