ஆஸ்திரேலியாவின் மகளிர் உள்ளூர் டி20 தொடரான வுமன்ஸ் பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் சிட்னி தண்டர் அணி - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணியின் கேப்டன் மெக் லெனின் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணியில் விலானி, லெனின், ப்ரீஸ், நட்டாலியா சேவியர், சதர்லேண்ட் என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்தது. சிட்னி தண்டர் அணி சார்பில் இஸ்மெய்ல், ஜோ ஜான்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி அணியின் தொடக்க வீராங்கனைகள் பியூமண்ட், ரேச்சல் ட்ரேனமன் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை தந்தனர்.
இதனால் சிட்னி தண்டர் அணி 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி சிட்னி சிக்சர் அணி இரண்டாவது முறையாக வுமன்ஸ் பிக் பேஷ் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இதையும் படிங்க:மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் லமிச்சானேவுக்கு கரோனா