பிக் பாஷ் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, ப்ளே சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதன் முதல் ஆட்டமான எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் நான்காவது இடம் பிடித்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்த்து ஐந்தாவது இடம் பிடித்த சிட்னி தண்டர்ஸ் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி கேப்டன் ஃபெர்குசன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய சிட்னி அணிக்கு கவாஜா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தபோது கவாஜா 54 ரன்களில் ஆட்டமிழக்க, அதையடுத்து ஃபெர்குசன் களமிறங்கினார்.
இதனிடையே அலெக்ஸ் ஹேல்ஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கேப்டன் ஃபெர்குசன் 33 ரன்களில் வெளியேறினார். இறுதியாக சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு கேப்டன் வேட் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஷார்ட் 37 ரன்களிலும், ரைட் 5 ரன்களிலும் வெளியேறினார்.
-
.@Uz_Khawaja is switched on today! #BBL09 pic.twitter.com/AzJR3WBWps
— KFC Big Bash League (@BBL) January 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@Uz_Khawaja is switched on today! #BBL09 pic.twitter.com/AzJR3WBWps
— KFC Big Bash League (@BBL) January 30, 2020.@Uz_Khawaja is switched on today! #BBL09 pic.twitter.com/AzJR3WBWps
— KFC Big Bash League (@BBL) January 30, 2020
சீரான இடைவேளையில் ஹோபர்ட் அணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஆட்டமிழக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ வீரர் பெய்லி 13 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இறுதியாக 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சிட்னி தண்டர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
-
Lenton didn't get a bat so he obviously wanted to get some k's into the legs!
— KFC Big Bash League (@BBL) January 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Terrific catch by the Thunder keeper! #BBL09 pic.twitter.com/IKhe8sdqjZ
">Lenton didn't get a bat so he obviously wanted to get some k's into the legs!
— KFC Big Bash League (@BBL) January 30, 2020
Terrific catch by the Thunder keeper! #BBL09 pic.twitter.com/IKhe8sdqjZLenton didn't get a bat so he obviously wanted to get some k's into the legs!
— KFC Big Bash League (@BBL) January 30, 2020
Terrific catch by the Thunder keeper! #BBL09 pic.twitter.com/IKhe8sdqjZ
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதால் அடுத்து நடக்கவுள்ள நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாக்-அவுட் சுற்றில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை சிட்னி தண்டர்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம் பற்றி வாய்திறந்த ஜெய்தேவ் உனாட்கட்!