அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ன் படி சிறப்பு அந்தஸ்து பெற்று வந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இனி வழங்க முடியாது என அறிவித்து அந்த பிரிவை மத்திய அரசு நீக்கிக் கொண்டது. மேலும், மாநில அந்தஸ்தை நீக்கிவிட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது.
இதனை எதிர்த்தும், ஆதரித்தும் பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மத்திய அரசின் இந்த முடிவு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஒரு மைல்கல் நடவடிக்கை' என்று அவர் கூறியுள்ளார்.