இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, ஒரே இடத்தில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள திரையரங்குகள், மால்கள், கோயில்கள், உடற்பயிற்சி நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாகக் காட்டிற்குள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொலி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
-
At a time when Gym’s are closed there should be no reason or excuse to continue your workout #outdoorworkout #nature #fitindia 💪 pic.twitter.com/bMvPrkb8NO
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">At a time when Gym’s are closed there should be no reason or excuse to continue your workout #outdoorworkout #nature #fitindia 💪 pic.twitter.com/bMvPrkb8NO
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 19, 2020At a time when Gym’s are closed there should be no reason or excuse to continue your workout #outdoorworkout #nature #fitindia 💪 pic.twitter.com/bMvPrkb8NO
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 19, 2020
ரெய்னாவின் ட்விட்டர் பதிவில், ‘அனைத்து உடற்பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் நேரத்தில், உங்களது பயிற்சிகளை மேற்கொள்ள எந்தக் காரணங்களும் தடையாக இருக்கக் கூடாது’ எனப் பதிவிட்டு, காட்டிற்குள் பயிற்சியை மேற்கொள்ளும் காணொலியையும் இணைத்துள்ளார்.
ரெய்னாவின் இந்த முயற்சிக்கு, கிரிக்கெட் வீரர்களும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:கிரீஸிடமிருந்து ஒலிம்பிக் சுடரைப் பெற்றுக்கொண்ட டோக்கியோ!