டிஎன்பிஎல் டி20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், காரைக்குடி அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற சூப்பர்கில்லீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அப்போது தொடக்க ஆட்டகாரர்களான ஸ்ரீதர் மற்றும் கோபிநாத் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஸ்ரீதர் 38 பந்துகளில் 54 ரன்களும், கோபிநாத் 40 பந்துகளில் 55 ரன்களும் விளாசினர்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது.
தொடர்ந்து சீறான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த காரைக்குடி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கேட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. சூப்பர் கில்லீஸ் அணி சார்பாக பெரியாசுவாமி 3 ஓவர்களில் 9 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் வெற்றிக்கு உதவிய பெரியசுவாமி, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.