ETV Bharat / sports

தோனி & ரெய்னா ஓய்வு: மணல் சிற்பத்தில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்! - சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, மணல் சிற்பம் மூலம் ரசிகர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Sudarshan Patnaik pays tribute to MS Dhoni, Suresh Raina with sand art

author img

By

Published : Aug 16, 2020, 10:37 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று (ஆக. 15) சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஒடிஸா மாநிலம் பூரி நகரைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்னாயக், பூரி கடற்கரை அருகே தோனி மற்றும் ரெய்னாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

தோனி & ரெய்னா ஓய்வு: மணல் சிற்பத்தில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்

அந்த சிற்பத்தில் தோனி மற்றும் ரெய்னாவின் உருவப்படங்களைச் செய்து, அதில் “இனி உங்களது அற்புதமான ஆட்டத்தை நாங்கள் இழப்போம்” என்று பதிவு செய்துள்ளார். இந்த செயல் சக கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் படிங்க:சர்வதேச ஓய்வுக்குப் பிறகு ரெய்னா வெளியிட்ட உருக்கமான கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.