ETV Bharat / sports

ஸ்டீவ் ஸ்மித்: மூன்றரை  வருடங்களுக்குப் பிறகு டி20 போட்டியில் ரீ - எண்ட்ரி !

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற்றதன் மூலம், மூன்றரை வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய டி20 அணிக்காக விளையாடவுள்ளார்.

Smith
author img

By

Published : Oct 8, 2019, 2:25 PM IST

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஓராண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரீ - எண்ட்ரி கொடுத்தார். இந்தத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவர், 379 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதம், மூன்று அரைசதம் என மொத்தம் 774 ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் எப்படி தர வேண்டும் என்பதை மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் வகையில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

Steve Smith
ஸ்டீவ் ஸ்மித்

அந்தவகையில், அவர் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கவுள்ளார். ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்த்து தலா மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற்றுள்ளார். அவர் இறுதியாக, 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில்தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்த கம்பேக் போலவே டி20 போட்டியிலும் ஸ்மித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் இரண்டு அரைசதம் உட்பட 431 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

ஆஸ்திரேலியா v இலங்கை டி20 போட்டிகள் விவரம்:

  1. முதல் டி20 போட்டி - அடிலெய்ட், அக்டோபர் 27
  2. இரண்டாவது டி20 போட்டி - பிரிஸ்பேன், அக்டோபர் 30
  3. மூன்றாவது டி20 போட்டி - மெல்போர்ன், நவம்பர் 1

ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் டி20 போட்டிகள் விவரம்:

  1. முதல் டி20 போட்டி - சிட்னி, நவம்பர் 3
  2. இரண்டாவது டி20 போட்டி - கென்பேரா, நவம்பர் 5
  3. மூன்றாவது டி20 போட்டி - பெர்த், நவம்பர் 8

இந்தத் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், கிளேன் மேக்ஸ்வெல், பென் மெக்டர்மோட், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டான்லேக், அஷ்டான் டர்னர், ஆண்ட்ரூவ் டை, டேவிட் வார்னர், ஆடம் சாம்பா, ஆஷ்டன் ஆகர்.

அதேசமயம், உலகக்கோப்பை தொடரில் வெறும் 87 ரன்களை மட்டுமே எடுத்ததால், ஆஸ்திரேலிய அணியிலிருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

Intro:Body:

Melbourne, Oct 8 (IANS) Australia have dropped all-rounder Marcus Stoinis for the upcoming T20I series against Sri Lanka and Pakistan. Stoinis was able to manage just 87 runs in the 50-over World Cup in UK and struggled with injuries.

Meanwhile, Steve Smith has been included in the 14-member Australia squad announced by Cricket Australia on Tuesday. Smith will play his first T20I in more than three-and-a-half years, his last coming against India in the 2016 T20 World Cup group game in Mohali.

Smith will be joined by David Warner, Pat Cummins and Mitchell Starc in the side captained by Aaron Finch. Wicketkeeper Alex Carey and Cummins will share the vice-captaincy.

Meanwhile, the Australian selectors have overlooked big-hitting batsmen Chris Lynn and D'Arcy Short, while spinner Nathan Lyon was unable to force his way into the shortest format as Ashton Agar and Adam Zampa were preferred over him.

"It is almost a year to the day until Australia hosts the men's Twenty20 World Cup and we have selected this squad with that in mind. We have looked to put a squad together that we think can take us through to that tournament," cricket.com.au quoted national selector Trevor Hohns as saying in a statement.

Australia will first face Sri Lanka in the three T20Is scheduled for October 27, 30 and November 1 in Adelaide, Brisbane and Melbourne respectively. Pakistan will then face Australia in the first T20I on November 3 in Sydney before taking on the hosts in Canberra and Perth on November 5 and 8.

Australia squad: Aaron Finch (c), Ashton Agar, Alex Carey, Pat Cummins, Glenn Maxwell, Ben McDermott, Kane Richardson, Steve Smith, Billy Stanlake, Mitchell Starc, Ashton Turner, Andrew Tye, David Warner, Adam Zampa

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.