ETV Bharat / sports

ஐபிஎல்: கோடிகளில் புரளும் நட்சத்திரங்கள்... அதிர்ச்சியில் உறையும் ரசிகர்கள்! - இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரின்

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

IPL auction story
IPL auction story
author img

By

Published : Dec 19, 2019, 2:08 PM IST

இந்தியாவின் கோடைக்காலம் வந்தால், எல்லோருக்கும் வெயிலின் தாக்கம் தெரிகிறதோ இல்லையோ.. ஐபிஎல்லின் தாக்கம் அனலாய் பற்றி எரியும். 2008ஆம் ஆண்டு முதல் அதாவது டி20 தொடர் உலக கிரிக்கெட்டை மாற்றிய காலத்தில், தனது முதல் சீசனைத் தொடங்கியது ஐபிஎல் தொடர்.

ஒவ்வொரு ஆண்டும் எட்டு அணிகளுடன் களமிறங்கிய ஐபிஎல் தொடரில், உலகின் அனைத்து ஜாம்பவான்களும் பங்கேற்றதினால் ஆட்டம் கோடை சூட்டோடு சேர்த்து, அனலை பறக்கவிட்டது. சச்சின், தோனி, மெக்கல்லம், கெய்ல், பிரெட் லீ, பாண்டிங், கில்கிறிஸ்ட், சங்க காரா என அனைத்து ஜாம்பவான்களையும் ஒரே தொடரில் கண்டதினால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களிடையேவும் ஐபிஎல் தொடர் ஒரு தனி இடத்தைப் பிடித்தது.

ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு ஆகிய நகரங்கள் பங்கேற்றாலும் அந்நகரத்தில் வாழும் ரசிகர்களின் எண்ணம் என்னவோ தனக்கு பிடித்த வீரரின் அணி தான், கோப்பையை வெல்ல வேண்டும் என கோயிலில் பூஜை செய்த காலங்கள் ஏராளம்.

இப்படி ரசிகர்கள் வீரர்களின் மீது, அளவுகடந்த அன்பு காட்டும் நிலையில், நட்சத்திர வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரிந்தால் சிலருக்கு ஹார்ட் அட்டாக் கூட வந்துவிடும். அப்படி கோடிகளில் புரளும் அணி வீரர்களின் விபரங்களைத் தற்போது காணலாம்.

அதிகபட்ச சம்பளம் வாங்கும் வீரர்:

  • உலகின் ரன் மெஷின் என அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக உள்ளார். இத்தொடரின் அதிகபட்ச சம்பளம் வாங்கும் வீரராக அவரே திகழ்கிறார். அவரின் சம்பளத்தொகை ரூ.17 கோடி ஆகும்.
    ரன் மெஷின் விராட் கோலி
    ரன் மெஷின் விராட் கோலி

ரூ.15 கோடியை சம்பளமாக பெறும் வீரர்கள்:

  • இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இருப்பது ஆச்சரியமல்ல. ஏனெனில் 10 சீசன்களாக இந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு, மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குச் சொந்தகாரர் இவரே. மேலும் சென்னை அணி பங்கேற்ற, அனைத்துத் தொடர்களிலும் காலிறுதிச்சுற்றுக்கு சென்றுதுள்ளதும், இவரின் கேப்டன்ஷிப்னாலேயே. இவருக்கு ரூ. 15 கோடியை சம்பளமாக தருகிறது, சென்னை அணி.
    மகேந்திர சிங் தோனி
    மகேந்திர சிங் தோனி
  • இதில் அடுத்ததாக தற்போதைய இந்திய அணியின் துணைக்கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா ரூ.15 கோடியை சம்பளமாக பெறுகிறார். ஏனெனில் இவரது கேப்டன்ஷிப்பில் தான், மும்பை அணி 4ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி, ஐபில் தொடரில் அதிக முறை சாம்பியன்ஷிப் ஆன அணி என்ற பெருமையைப் பெற்றது. மேலும் இத்தொடரில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையும் அத்துடன் அடங்கும்.
    மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
    மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா
  • இதற்கு அடுத்தபடியாக யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ் மேன் ரிஷப் பந்த் ரூ.15 கோடியை சம்பளமாக பெறுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால், அதுதான் நிஜத்தில் உண்மை. ஏனெனில் அவர் சர்வதேச போட்டிகளைத் தவிர, மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவர். மேலும் இவர் தற்போதைய இந்திய அணியின் எதிர்காலமாகவும் கருதப்படுவது மற்றொரு சிந்தனை. ஐபிஎல்லில் பட்டையைக் கிளப்பும் பந்த், இந்திய அணியிலும் கொஞ்சம் பேட்டை சுழற்றினால், நன்றாக தான் இருக்கும்.
    இந்தியாவின் எதிர்காலம் ரிஷப் பந்த்
    இந்தியாவின் எதிர்காலம் ரிஷப் பந்த்

ரூ.12.5 கோடியை சம்பளமாக பெறுவோர்:

  • இந்தப் பட்டியலில் முக்கியப் பங்கு வகிப்பவர், இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் தான். ஆல் ரவுண்டரான இவரை கடந்தாண்டு ஐபில் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதன் மூலம் கடந்தாண்டு ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் மட்டும் தான்...
    உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ்
    உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ்
  • இந்தப் பட்டியலில் அடுத்து இடம்பிடிப்பவர் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித். இவரின் இந்தாண்டு சம்பளத் தொகையை ரூ.12.5 கோடியாக நிர்ணயித்துள்ளது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. மேலும் இந்தாண்டு அந்த அணியின் கேப்டனாகவும் இவர் செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்டீவ் ஸ்மித்
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்டீவ் ஸ்மித்
  • இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அதிரடி வீரர் டேவிட் வார்னர். இவர் ஓராண்டு தடைக்குப் பின் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கினாலும் எப்படி போனேனோ...அப்படியே திரும்பி வந்துட்டன்னு சொல்லு என்பதுபோல, ஐபிஎல் தொடரில் பந்து வீச்சாளர்கள் வெறுக்கும் வீரராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வலம் வருபவர். இவருக்கு அந்த அணி ரூ.12.5 கோடியை சம்பளமாக வழங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
    டேவிட் வார்னர்
    டேவிட் வார்னர்
  • இந்தப்பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடித்தவர் மாயஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன். ஆரம்பத்தில் பந்துவீச்சில் மட்டும் எதிரணிக்கு தொல்லை கொடுத்து வந்த இவர், சமீப காலமாக பேட்டிங்கிலும் தலைவலியை ஏற்படுத்தி வருதினால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இவருக்கு ரூ.12.5 கோடியை சம்பளமாக வழங்கி தக்கவைத்துள்ளது.
    மிஸ்ட்ரீ ஸ்பின்னர் சுனில் நரைன்
    மிஸ்ட்ரி ஸ்பின்னர் சுனில் நரைன்

ரூ.11. கோடியை சம்பளமாகப் பெறுபவர்கள்:

  • இந்தப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளதால், சென்னை அணி இவருக்கு ரூ.11 கோடியை சம்பளமாக வழங்கி வருகிறது.
    ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா
    ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா
  • அவருக்கு அடுத்து இந்தப் பட்டியலில் இடம்பிடிப்பவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கிய காரணத்தால், அந்த அணி இவருக்கு ரூ.11 கோடியை சம்பளமாக வழங்குகிறது.
    கே.எல். ராகுல்
    கே.எல். ராகுல்
  • இதற்கடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனான ஹர்திக் பாண்டியா இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். தனது பேட்டிங், பவுங்லிங் என இரு பிரிவிலும் எதிரணிக்குத் தொல்லை தருவதினால், இவருக்கு ரூ.11 கோடி சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
    ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா
    ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா
  • இதில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் 'மிஸ்டர் 360' என்றழைக்கப்படும், அதிரடி வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் தான். இவர் நினைத்தால் எப்போது வேண்டுமானலும் ஆட்டத்தை மாற்ற முடியும் என்பதினால், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவருக்கு ரூ.11 கோடியை சம்பளமாக வழங்கி வருகிறது. 'சால கப் நம்தே'...
    ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஏபிடி வில்லியர்ஸ்

  • இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடித்தவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்தவர். அவர் வில்லியம்சன் இல்லை, இந்தியாவின் மனீஷ் பாண்டே. தனது அதிரடி ஆட்டத்தினால் நடுவரிசையில் அணியைத் தூக்கி பிடிப்பார் என்ற நோக்கத்தில், இவருக்கு அந்த அணி ரூ.11 கோடியை சம்பளமாக வழங்கி, தக்கவைத்துள்ளது.
    மனீஷ் பாண்டே
    மனீஷ் பாண்டே

இப்படி முன்னணி வீரர்கள் பலரும் கோடியில் புரளும் நிலையில், இன்றைய ஐபிஎல் ஏலத்தில் எத்தனை வீரர்கள் இதனைவிட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு இந்தப் பட்டியலில் இணைவார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:ரஞ்சி கோப்பை: இமாச்சலிடம் தடுமாறிய தமிழ்நாடு..! பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய இமாச்சல்!

Intro:Body:

IPL auction story

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.