பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், இப்போட்டியை நேரில் காண அந்நாட்டு ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்தில் திரண்டனர்.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணாரத்னே - ஒஷாடா ஃபெர்னாண்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து வந்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களைச் சேர்த்த நிலையில், திமுத் கருணா ரத்னே 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஃபெர்னாண்டோ 40 ரன்களில் அவுட்டாக, அதன்பின் வந்த இலங்கை வீரர்கள் குசால் மெண்டீஸ் (10), தினேஷ் சண்டிமால் (2) ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஒருகட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி பின், பாகிஸ்தான் அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 127 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் தடுமாறியது. இந்த நிலையில், ஏஞ்சலோ மேத்யூஸ் - தனஞ்ஜெய டி சில்வா ஜோடி 62 ரன்கள் சேர்த்த நிலையில், மேத்யூஸ் 31 ரன்களில் நசீம் ஷா பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
-
Naseem Shah has sent Angelo Mathews on his way, but now bad light has stopped play 😔
— ICC (@ICC) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇱🇰 are 202/5.#PAKvSL LIVE 👉 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/jnhPY7k6JU
">Naseem Shah has sent Angelo Mathews on his way, but now bad light has stopped play 😔
— ICC (@ICC) December 11, 2019
🇱🇰 are 202/5.#PAKvSL LIVE 👉 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/jnhPY7k6JUNaseem Shah has sent Angelo Mathews on his way, but now bad light has stopped play 😔
— ICC (@ICC) December 11, 2019
🇱🇰 are 202/5.#PAKvSL LIVE 👉 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/jnhPY7k6JU
இதையடுத்து, இலங்கை அணி 62.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழந்து 202 ரன்களைக் குவித்த போது பொதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தனஞ்ஜெயா டி சில்வா 38 ரன்களுடனும், நிரோசன் டிக்வேலா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா இரண்டு, உஸ்மான் ஷின்வாரி, ஷஹீன் அஃப்ரிடி, முகமது அப்பாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதையும் படிங்க: பிக் பேஷ் லீக்கை விட இத்தொடர் சிறந்தது - ரஸ்ஸல்