ETV Bharat / sports

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தம்மிகா பிரசாத் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் அறிவித்துள்ளார்.

Sri Lanka pacer Dhammika Prasad retires from international cricket

author img

By

Published : Feb 19, 2021, 6:23 PM IST

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத். இதுவரை இலங்கை அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார்.

இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சளார்களில் ஒருவராக திகழ்ந்து வந்த பிரசாத், தோள்பட்டை காயத்தினால் பல்வேறு போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளை இழந்தார். இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அவர் விளையாடினார்.

அதன்பின் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்த தம்மிகா பிரசாத், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இத்தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது.

இதையும் படிங்க: 'தோனியுடன் விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறியது' - கிருஷ்ணப்பா கௌதம் நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.